இருமினால் கொரோனாவா? பீதி வேண்டாம்.. விழிப்புணர்வே போதும்...
வீட்டின் அருகே யாருக்கேனும் இருமல், காய்ச்சல் இருந்தாலே கொரோனா தொற்று தான் என்ற அச்சம் அவசியமா ? Hand sanitizer மற்றும் Mask கட்டாயம் அணிய வேண்டுமா ? இதோ விடையளிக்கிறது இந்த செய்தி...
கொரோனா நோய்த் தொற்றும் உலகநாடுகளில் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது . இதனால் வீட்டில், அக்கம்பக்கத்தில் யாருக்கேனும் சாதாரணமான காய்ச்சல், இருமல் போன்றவை ஏற்பட்டாலும் கொரோனா தொற்றாக இருக்குமோ என்ற அச்சத்தில் ஒதுக்கிவைக்கும் நிலையும், வெளியேற்றுவதும் சில இடங்களில் நடந்து வருகிறது.
மனிதர்களுக்கு பல்வேறுவகையான வைரஸ் தொற்றின் காரணமாக சளி, இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது. இருப்பினும் கொரோனாவில் உள்ள novel corona என்ற வைரசால் ஏற்படும் நோய்த்தொற்று மட்டுமே அபாயம் எனவும்,தற்போதையை சூழலில் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் தவிர மற்ற யாருக்கேனும் இருமல்,காய்ச்சல் இருந்தாலும் உடனடியாக அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்கிறார் அரசு மருத்துவர் வடிவேலன்.
கொரோனா தொற்று ஏற்படுவதை தவிர்க்க கைகளை சுத்தமாக வைத்திருக்க சுகாதாரத்தறை அறிவுறுத்தியுள்ள நிலையில், Hand sanitizerக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது. ஆனால், Hand Sanitizer கட்டாயம் பயன்படுத்த தேவையில்லை என விளக்குகிறார் மருத்துவர் வடிவேலன். தொடர்ச்சியாக , வீட்டிலிருக்கும் சோப்பை கொண்டே எவ்வாறு கைகழுவ வேண்டும் எனவும் செயல்முறை விளக்கமளித்தார்.
முக கவசம் வாங்குவதற்காக ஒவ்வொரு மருந்தகங்கள் படிகளையும் சாமானிய மக்கள் ஏறி இறங்கும் நிலையில் , அனைவரும் முககவசம் அணிய வேண்டிய கட்டாமில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
கொரோனா குறித்து அச்சமும் பீதியை மனதில் ஏற்றி வீண் செலவு செய்யாமல் , மன உறுதியுடனும் விழிப்புணர்வோடும் இருந்தாலே கொரோனா நோய்த் தொற்றை விரட்டியடிக்கலாம் என்று மருத்துவர்கள் நம்பிக்கை ஊட்டுகின்றனர்.
Comments