Zostel X Homes 1 கோடி வருவாயை ஈட்டியுள்ளது

0 1269

பயணம் மற்றும் விடுதி தளமான ஜோஸ்டல் எக்ஸ் ஹோம்ஸ் ஏறக்குறைய 3000 முன்பதிவுகளை செய்து 1 கோடிக்கும் அதிமான வருவாயை ஈட்டியுள்ளது.

இந்தியாவில், மேலும் 500 ஜோஸ்டல் எக்ஸ் ஹோம்களை தொடங்கவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை 15 ஜோஸ்டல் எக்ஸ் ஹோம்கள் உள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி தரம்வீர் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். அனைவரும் எளிதில் தங்களது விருப்பங்களை தேடும் வகையிலும், அவர்கள் விருப்பங்களுக்கு தேவையானவற்றை ஜோஸ்டல் எக்ஸ் அளித்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், ஜோஸ்டல் எக்ஸ் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பாராட்டுகளை பெற்றுள்ளதாகவும், இந்த வரவேற்பை அடுத்து வரும் காலங்களில் 500 புதிய ஜோஸ்டல் எக்ஸ் இல்லங்களை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments