கொரோனா அச்சத்தால் வெறிச்சோடிய அசைவ உணவகங்கள்
கொரோனா அச்சம் காரணமாக சென்னையில் உள்ள பல உணவகங்களில் பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகளின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.
மதிய வேளைகளில் பரபரப்பாக காணப்படும் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல உணவகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
சிக்கன் உண்பதால் கொரோனா நோய் பரவும் என்ற புரளியும் விற்பனை மந்தத்துக்கான காரணமாக உள்ளது. பல கடைகளில் 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிக்கன் பிரியாணி 80 ரூபாய்க்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளபோதும் மக்கள் அதில் நாட்டம் காட்டவில்லை.
ஆன்லைன் மூலமாக அசைவ உணவுகள் வாங்குவதும் வெகுவாக குறைந்துள்ளதாக உணவக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments