தமிழகத்தில் இருந்து 6 பேர் மாநிலங்களவை MP-க்களாக போட்டியின்றி தேர்வு

0 3586

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் 2-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அந்த இடங்களுக்கு தி.மு.க. சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோரும் அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, த.மா.காவின் ஜி.கே.வாசன் ஆகியோரும் 3 சுயேச்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சுயேச்சைகளின் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்த தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசன் சான்றிதழ்களை வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments