கொரோனா அச்சுறுத்தல்: வெறிச்சோடிய ஸ்பெயின் நாடாளுமன்றம்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஸ்பெயின் நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்கள் சிலர் மட்டுமே வந்திருந்த நிலையில் பிரதமர் பெட்ரோ சாஞ்சஸ் உரையாற்றினார்.
மாட்ரிட்டில் உள்ள ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் 350 உறுப்பினர்கள் உள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பெரும்பாலான உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை. அமைச்சர்கள் 5 பேரும், உறுப்பினர்கள் 28 பேரும் மட்டுமே வந்திருந்தனர்.
உறுப்பினர்கள் இல்லாத வெறும் அவையில் பேசிய பிரதமர் பெட்ரோ சாஞ்சஸ், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பாவில் பெரும்பாலான நாடுகளில் பள்ளிகளும் வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டார். பிரதமர் மனைவி பெகோனா கோமசும் கொரோனா பாதிப்புக்குள்ளானார் என்பது குறிப்பிடத் தக்கது.
Comments