சிலிண்டர் டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் வசூல்.. எண்ணைய் நிறுவனங்கள் எச்சரிக்கை
சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனங்களுக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என பொதுத்துறை எண்ணைய் நிறுவனங்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளன.
இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வாடிக்கையாளர்கள், கூடுதல் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க ஆன்லைன் முறையில் பணம் செலுத்தும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏப்ரல் 8 ம் தேதிக்கு, விசாரணை யை தள்ளிவைத்து, உத்தரவிட்டனர். இதனிடையே, இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி தமிழ் நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Comments