BS IV வாகனங்களை விற்பனை செய்ய கால அவகாசம் கோரியது FADA

0 1203

பாரத் ஸ்டேஜ் 4 வாகனங்களை விற்பனை செய்ய மே மாதம் வரை அனுமதி வழங்ககோரி வாகன விற்பனையாளர் சங்கம் உச்ச நீதிமன்றத்திடம் கேட்டுகொண்டுள்ளது.

வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பாரத் ஸ்டேஜ் 4 வாகனங்கள் விற்பனை தடை செய்யப்பட்டு, பாரத் ஸ்டேஜ் 6 வாகனங்கள் விற்பனை அமலுக்கு வரும் என அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தால், பாரத் ஸ்டேஜ் 4 வாகனங்கள் விற்பனை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தற்போதுள்ள பாரத் ஸ்டேஜ் 4 வாகனங்கள் மார்ச் 31க்குள் விற்பனை செய்வது இயலாத காரியம் என்றும் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பாரத் ஸ்டேஜ் 4 வாகனங்களை விற்பனை செய்ய மே 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்க உச்ச நீதிமன்றத்திடம் வாகன விற்பனையாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments