கொரோனா குணமான காஞ்சி என்ஜினீயர், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மீண்டும் அனுமதி

0 3755

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் பாதிக்கப்பட்ட முதல் நபரான காஞ்சிபுரம் என்ஜினீயர், சென்னை - ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கடந்த 4 ம் தேதி, மஸ்கட்டில் இருந்து சென்னை திரும்பிய இவர், கொரானா பாதிப்புக்கு, 2 வாரத்திற்கும் மேல், சிகிச்சை பெற்று விட்டு, கடந்த சில தினங்களுக்கு முன், வீடு திரும்பி இருந்தார். ஏற்கனவே, 2 முறை ரத்த பரிசோதனை முடித்த காஞ்சிபுரம் என்ஜினீயர், மறு ஆய்வு மருத்துவ பரிசோதனைக்காக மீண்டும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். 

தனிமை வார்டில் தங்கவைக் கப்பட்டு உள்ள, காஞ்சிபுரம் என்ஜினீயரை டாக்டர்கள், தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதுகுறித்து விளக்கம் அளித்த டாக்டர்கள், தற்போது, காஞ்சிபுரம் என்ஜினீயர் நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments