இந்தியன் 2 விபத்து ஒத்திகையில் நடித்து காட்டிய இயக்குநர் சங்கர்

0 2503

இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் உடைந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் திரைப்பட இயக்குநர் சங்கர் உட்பட 23 பேர் விபத்து ஒத்திகையில் நடித்துக் காட்டினர்.

பிப்ரவரி 19ஆம் தேதி பூவிருந்தவல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்றபோது, கிரேன் உடைந்து விழுந்ததில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக நசரத்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு மத்தியக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் விபத்து எப்படி நடந்தது என்பதை 23 பேரும் ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் ஆஜராகி நடித்துக் காட்டி விளக்கம் அளித்தனர். இந்தக் காட்சி வீடியோ பதிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவினர் மேற்கொண்டு விசாரணை நடத்த உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments