தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

0 8010

ஏர்டெல், வோடாபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிலுவைத் தொகையைச் செலுத்தாவிட்டால், அவற்றின் மேலாண்மை இயக்குநர்கள் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயின்படி 16 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாகத் தொலைத்தொடர்புத்துறைக்கு ஒரு லட்சத்து 69 ஆயிரம் கோடி ரூபாயைச் செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபரில் தீர்ப்பளித்தது.

நிலுவைத் தொகையைத் தவணை முறையில் பெற அனுமதி அளிக்கக் கோரித் தொலைத் தொடர்புத்துறை சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ஷா அமர்வு, முன்பு அளித்த தீர்ப்பில் இருந்து பின்வாங்க முடியாது எனத் தெரிவித்தது.

ஏற்கெனவே நிர்ணயித்த தொகையை மறுமதிப்பீடு செய்யக் கோருவது நீதிமன்ற அவமதிப்பாகும் எனத் தெரிவித்ததுடன், தேவைப்பட்டால், மேலாண் இயக்குநர்களைச் சிறைக்கு அனுப்ப வேண்டியிருக்கும் என எச்சரித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments