ஏர் இந்தியாவுக்கு கொரோனா வடிவில் புதிய சோதனை
ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் தவித்துவரும் ஏர் இந்தியாவுக்கு கொரோனா வடிவில் புதிய சோதனை வந்துள்ளது.
கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானப் போக்குவரத்து மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதை அடுத்து ஏர் இந்தியாவின் வருவாய் குறைந்துள்ளது. இந்த நிலையில் சிக்கன நடவடிக்கையாக, பைலட்டுகள் மற்றும் இதர பணியாளர்களுக்கான சிறப்புப் படிகளை ரத்து செய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. ஏப்ரல் முதல் இது அமலுக்கு வரும்.
எக்ஸிகியூட்டிவ் பைலட்டுகளுகாகன பொழுதுபோக்கு படிகள் முழுமையாக ரத்தாக்கப்படுவதாகவும், லே ஓவர் எனப்படும் இரண்டு பயணங்களுக்கு இடையேயான படித் தொகை குறைக்கப்படுவதகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. கொரோனா தாக்கத்தால் 75 சதவிகித விமான நிறுவனங்கள் கடந்த 3 மாதங்களாக செலவுகளை ஈடு கட்ட வழியின்றி தவிப்பதாக IATA எனப்படும் சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.
Comments