கொரோனா: கிருமி நாசினிகள், முகக்கவசங்கள் அதிக விலைக்கு விற்பனை என புகார்
கொரோனா தடுப்பு கிருமி நாசினிகள் மற்றும் முகக்கவசங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவுக்கு, பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முககவசங்கள், கிருமி நாசினிகளை அத்தியாவசிய பொருட்களாக அறிவித்த மத்திய அரசு, அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தல்கள் அனுப்பியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் என்ற வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சென்னையில், முக கவசங்கள், கிருமி நாசினிகள் கிடைக்காத நிலை உள்ளதாக தெரிவித்த அவர்,இதுபோன்ற பொருட்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பது ஏழு ஆண்டுகள் தண்டனை விதிக்கத்தக்க குற்றம் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம்,இது தொடர்பாக தமிழக அரசு மார்ச் 20ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.
Comments