தி கிராண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள இந்திய பணியாளர்களை மீட்க இந்திய தூதரகம் நடவடிக்கை
கொரோனா தொற்று அபாயத்தை அடுத்து கலிபோர்னியாவின் ஆக்லாந்து துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட தி கிராண்ட் பிரின்சஸ் (The Grand Princess) சொகுசுக் கப்பலின் இந்திய பணியாளர்களை மீட்க அனைத்து உதவிகளும் செய்யப்படும் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
ஆக்லாந்து துறைமுகத்தில் இருந்து இந்த கப்பல் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித் சிங் சாந்து, அமெரிக்கா மற்றும் குறிப்பிட்ட கப்பல் நிறுவன அதிகாரிகளிடம் இது தொடர்பாக பேசி அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளார்.
மீட்கப்படுவதற்கு முன்னர் அவர்களுக்கு சட்டபூர்வ நோய்தடுப்புக் கண்காணிப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2 ஆயிரத்து 500 பயணிகள் இருந்த இந்த கப்பலில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் உள்ள ஆயிரத்து 100 பணியாளர்களில் 500 பேர் ஏற்கனவே தொற்று இல்லை என உறுதியாகி வீடுகளுக்கு திரும்பிச் சென்றுவிட்டனர்.
Comments