தேஜஸ் இலகு ரக போர் விமானம் முதல் பயணம்..!
அதிநவீன வசதிகள் கொண்ட தேஜஸ் இலகு ரக போர் விமானம் பெங்களூருவில் தனது முதல் பயணத்தை மேற்கொண்டது.
இந்துஸ்தான் எரோனாட்டிக்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் இறுதிகட்ட இயக்க ஒப்புதல் கட்டத்தை எட்டியது. சுமார் 40 நிமிடங்கள் வானில் பறந்ததன் மூலம், விமானப்படையில் இணைக்கப்படுவதை நோக்கிய நடைமுறையை நெருங்கியுள்ளது.
மேலும் இந்த நகர்வு, மீதமுள்ள 15 விமானங்களையும் வரும் நிதியாண்டிற்குள் தயாரித்து அளிக்க பாதை அமைத்துள்ளதாக இந்துஸ்தான் எரோனாட்டிக்ஸ் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
வானில் பறக்கும் போதே எரிபொருள் நிரப்புவது, கண்ணுக்கெட்டாத தொலைவிலுள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Comments