சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளதாக ISMA தகவல்

0 652

நடப்பாண்டின் அறுவடை காலம் முடிவடையும் தருவாயில் இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 21% குறைந்துள்ளது.

இந்த ஆண்டு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் ஒரு வருடத்திற்கான சர்க்கரை உற்பத்தியில் மோசமான சரிவை பதிவு செய்து உள்ளது.பொதுவாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் சர்க்கரை அறுவடை காலத்திலிருந்து ஜனவரி மாதத்தில் அறுவடை உச்சம் பெறும். அந்த வகையில், இந்தாண்டின் மார்ச் வரை 21.58 மில்லியன் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, 7.36 மில்லியன் டன்னாக இருந்தது என்று இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் சர்க்கரை அறுவடை பற்றாக்குறை நாட்டின் 2வது பெரிய சர்க்கரை உற்பத்தி மாநிலமான மகாராஷ்டிராவில் உற்பத்தியைக் குறைத்துள்ளது. அதன்படி, மார்ச் 15 ஆம் தேதி நிலவரப்படி, 55.85 லட்சம் டன் சர்க்கரை மட்டுமே மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு இதே நேரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 100.08 லட்சம் டன்னை விட 44.2 சதவீதம் குறைவடைந்துள்ளது. கடந்த ஆண்டு 195 ஆலைகளில் இருந்த சர்க்கரை அறுவடை ஆலைகள் , இந்த ஆண்டில் 146 மாநிலமாக, குறைந்துள்ளது. அதேபோல், இந்த ஆண்டு தாமதமான அறுவடை கால பருவத்தாலும், கடந்த ஆண்டு பெய்த மழையால், பயிர்கள் சேதமடைந்ததுள்ளதாக இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் மிக குறைந்த அளவிலே மகசூல் கிடைத்துள்ளதாகவும், 2019-20 ஆண்டில் 56 சர்க்கரை ஆலைகள் ஏற்கனவே பெரும்பாலான மாநிலங்கள் மூடப்பட்டு 90 சர்க்கரை ஆலைகள் மட்டுமே இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, நடப்பாண்டின் அறுவடை காலத்தில் தற்போது இயங்கும் ஆலைகள் முன்கூட்டியே மூடப்படும் என ISMA தெரிவித்துள்ளது.

மேலும், பிற மாநிலங்களில் பெரும்பாலானவை சர்க்கரை உற்பத்தி பற்றாக்குறையை பதிவு செய்துள்ளன.அதன்படி, கர்நாடகாவில், 63 ஆலைகள் கடந்த ஆண்டு 42.45 லட்சம் டன்னிலிருந்து 33.35 மில்லியன் டன் சர்க்கரையை உற்பத்தி செய்துள்ளதாகவும், தமிழகத்தில், 4.12 லட்சம் டன்னாக இருந்து தற்போது 5.54 லட்சம் டன்னாக உள்ளதாகவும் ISMA குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments