கொரோனாவை சீனா வைரஸ் என டிரம்ப் கூறியதற்கு சீனா கண்டனம்
கொரோனா வைரசைச் சீனா வைரஸ் எனத் தான் தெரிவித்தது மிகவும் சரியானதே என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசால் சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், கொரோனா வைரசைச் சீனா வைரஸ் எனக் குறிப்பிட்டார். பொருளாதாரச் சிக்கலில் வேலையிழந்தவர்களுக்கு ஒரு லட்சம் கோடி டாலர் நிதியுதவி வழங்கப்போவதாக இந்தக் கூட்டத்துக்குப் பின் அறிவிக்கப்பட்டது.
அதன்படி பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஆயிரம் டாலர் காசோலையை நேரடியாக வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதனிடையே சீனா வைரஸ் என டிரம்ப் பேசியதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலளித்த டிரம்ப், அமெரிக்க ராணுவம் தான் கொரோனா வைரசைப் பரப்பியதாகச் சீனா கூறுவது தவறு என்றும், கொரோனா வைரஸ் சீனாவில் இருந்தே பரவியதாகவும் தெரிவித்தார்.
Comments