14 ரயில்களின் 50 சேவைகள் ரத்து..!
முன்பதிவு மிகவும் குறைந்ததால் சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரை, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட இருந்த 14 ரயில்களின் 50 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கப் பயணங்களைத் தவிர்க்குமாறும், நெரிசலான இடங்களைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்பதிவு மிகவும் குறைந்ததால் சென்னை சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் - மதுரை இடையிலான துரந்தோ ரயிலின் 6 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் இடையிலான குளிர்வசதி கொண்ட ரயிலின் 8 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மங்களூர் - மட்கான் இடையிலான இன்டர்சிட்டி விரைவு ரயில் மார்ச் 19 முதல் 31 வரை மொத்தம் 26 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல் -செகந்திராபாத் இடையிலான விரைவு ரயிலின் 4 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Comments