ஈரான் செர்னோபில் போல இருப்பதாக அமெரிக்கா விமர்சனம்

0 7188

கொரோனா குறித்த உண்மைத் தகவல்களை ஈரான் அரசு மறைப்பதால், சரியான தகவல்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களுக்கு அனுப்பித் தருமாறு, ஈரான் மக்களுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனா தொற்றால், ஈரான் மற்றோர் செர்னோபில் போல மாறியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றில் ஈரான் அரசு சொந்த நாட்டு மக்களுக்கே துரோகம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சகம், தாங்கள் ஈரான் மக்களுக்கு எதிரி அல்ல என்றும் கூறியிருக்கிறது.

ஈரான் மக்களுக்குகாக இது குறித்து அமெரிக்கா ஏற்கனவே வெளியிட்ட டெலகிராம் போன்ற செயலி இணைப்பில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவற்றில் சுமார் ஆயிரத்து 300 தகல்கள் கொரோனா குறித்தவை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதனிடையே அமெரிக்கா தங்கள் மீது பொருளாதார பயங்கரவாதத்தை திணிப்பதாக குற்றஞ்சாட்டி உள்ள ஈரான், கொரோனா தடுப்பு மருத்துவ உதவிகள் கிடைப்பதையும் அமெரிக்கா தடுத்து வருவதாக கண்டனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments