கொரோனா தாக்கத்தால் இந்திய சுற்றுலா துறைக்கு ரூ.15,000 கோடி இழப்பு

0 1764

கொரோனா வைரஸ் தாக்கத்தால், இந்திய சுற்றுலா துறைக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த விசா ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. தாஜ்மகால் போன்ற முக்கிய சுற்றுலா தளங்களும் 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. இதனால் இந்தியா வர முன்பதிவு செய்திருந்த விமான டிக்கெட்டுகள், அறைகளுக்கான முன்பதிவை வெளிநாட்டினர் ரத்து செய்து வருகின்றனர்.

இதுபோன்ற காரணங்களினால் 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டிருப்பதாக இந்திய சுற்றுலா கழக ஆப்பரேட்டர்கள் சங்கம் (The Indian Association of Tour Operators (IATO) ) தெரிவித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அந்த சங்கம் எழுதிய கடிதத்தில், மார்ச்-ஏப்ரலில் 15 லட்சம் சுற்றுலா பயணிகளை இந்தியா இழந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.


SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments