மலேசியாவில் தவிக்கும் இந்திய மாணவர்களை விமானம் மூலம் மீட்க நடவடிக்கை...

0 1469

மலேசியாவில் தவித்து வரும் இந்திய மாணவ, மாணவிகள்  நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர் விமான நிலையத்தில் காத்திருக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் பிற பயணிகளின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, டெல்லி மற்றும் விசாகபட்டினத்தில் இருந்து ஏர் ஏசியா விமானங்கள் செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிலிப்பைன்சில் ஏப்ரல் 14 ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதால், அங்கிருந்து புறப்பட்ட 200 மருத்துவ மாணவ, மாணவிகள் கோலாலம்பூர் விமான நிலையத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

Appreciate the difficult situation of Indian students and other passengers waiting in transit at Kuala Lumpur airport. We have now approved @AirAsia flights for you to Delhi and Vizag.

These are tough times and you should understand the precautions. Please contact the airline.

— Dr. S. Jaishankar (@DrSJaishankar) March 17, 2020 ">

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments