டெல்லி கலவரம் தொடர்பாக பாகிஸ்தானில் இருந்து இயங்கி வந்த சமூக வலைதளக் கணக்குகள் கண்டுபிடிப்பு
டெல்லி கலவரம் தொடர்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமூக வலைதளக் கணக்குகள் பாகிஸ்தானில் இருந்து இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்ட நிலையில் சமூகவலைத்தளங்களில் போலியான செய்திகள் உலா வந்ததை பாதுகாப்புத்துறையினர் கண்டறிந்தனர். இதுகுறித்து நடத்திய ஆய்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி சமூக வலைத்தளங்கள் பாகிஸ்தானில் இருந்து இயங்கிவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி உள்ளிட்ட நகரங்களில் இருந்து #DelhiRiots2020, #DelhiBurning, #ShameonDelhiPolice, #DelhiPoliceTruth, மற்றும் #DelhiPoliceMurders என்ற பெயரில் செய்திகள் பரவியது தெரிய வந்துள்ளது.
இவை தவிர பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலும் ட்வீட்டுகள் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Comments