கொரோனா பீதி காரணமாக சிறையில் இருந்து தப்பிய 1,500 கைதிகள்
பிரேசிலில் கொரோனா பீதி காரணமாக ஆயிரத்து 500 கைதிகள் சிறைகளில் இருந்து தப்பிச்சென்றனர்.
அந்நாட்டில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக சிறைச்சாலைகளில் கைதிகளை உறவினர்கள் சந்திக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள 4 சிறைச்சாலைகளில் தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகளுக்கு உள்ளான ஆயிரத்து 500-க்கும் அதிகமான கைதிகள் கொரோனா பீதி காரணமாக சிறைச்சாலைகளில் இருந்து தப்பிச்சென்றனர். அவர்களை தீவிரமாக தேடிவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments