கொரோனா வெளிபரப்பில் எவ்வளவு நேரம் உயிரோடு இருக்கும் ?
அமெரிக்காவில் உள்ள ஆய்வகம் ஒன்று, கொரோனா வைரஸ், சில குறிப்பிட்ட பொருட்களின் மேற்பரப்புகளில் படிந்தால், எத்தனை நாட்கள், எவ்வளவு மணி நேரம் உயிரோடு இருக்கும் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.
மனிதரிடமிருந்து, மனிதனுக்கு பரவும் கொரோனா, முதன்முதலில் எப்படி, எங்கிருந்து பரவியது என்ற ஆராய்ச்சிக்கு இதுவரை முடிவு கிட்டவில்லை. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ராக்கி மவுண்டெய்ன் ஆய்வகத்தின், வைரஸ் சூழலியல் துறை தலைவர் வின்சென்ட் மன்ஸ்டெர் வெளியிட்டுள்ளார்.
இதன்படி, பிளாஸ்டிக் அல்லது ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பொருட்கள் மீது, கொரோனா வைரஸ் படிந்தால், 3 நாட்கள் வரையில், உயிரோடு இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அட்டை உள்ளிட்ட காட்போர்டு பொருட்களின்மீது 24 மணி நேரம் உயிரோடு இருக்கும். காற்றில் 3 மணி நேரமும், காப்பரில் 4 மணி நேரமும் கொரோனா வைரஸ் ஆக்டிவாக இருக்கும் என, அமெரிக்க ஆய்வகம் தகவல் வெளியிட்டுள்ளது.
Comments