இந்தியாவில் முதல் கடற்படை பெண் அதிகாரிக்கு கொரோனா?
இந்திய கடற்படையின் முதல் பெண் அதிகாரியாக கருதப்படுபவர், கொரோனா தொற்று சந்தேகத்தின்கீழ் கொல்கத்தா மருத்துவமனையில் தனிமையில் கண்காணிக்கப்படுகிறார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து அண்மையில் நாரி சக்தி விருதை பெற்ற அவர், இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு சென்று விட்டு அண்மையில் திரும்பியிருந்தார்.
கொல்கத்தாவிலுள்ள ஐடி மற்றும் பிஜி மருத்துவமனைக்கு காய்ச்சல், இருமலுடன் அவர் வந்திருந்தார். இதையடுத்து கொரோனா வைரசாஸ் அவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், தனிவார்டில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்.
அவரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்தபிறகே, கொரோனா உள்ளதா, இல்லையா என்பது தெரிய வரும்.
Comments