கொரோனா குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது

0 12978

சமூக வலைத்தளங்களில் கொரோனா குறித்து தவறான தகவல் பரப்பியதாக வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 3 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் 2 பேர் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களுக்கு கொரோனா உள்ளதாகவும் கூறி, அவர்களின் புகைப்படங்களுடன் தொலைக்காட்சியில் செய்தி வருவதைப்போன்ற போலி வீடியோ ஒன்று, சமூக வலைத்தளங்களில் உலாவந்தது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட இரு இளைஞர்கள் தரப்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை செய்த போலீசார், கொரோனா குறித்து தவறான தகவல் பரப்பியதாக குடியாத்தம் பகுதியை சேர்ந்த சிவகுமார், சுகுமார், விஜயன் ஆகிய 3 பேரை கைதுசெய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments