மீனவ கிராமங்களில் 10 கோடி ரூபாய் செலவில் மீன் இறங்கு தளம் அமைப்பு
கன்னியாகுமரி மாவட்டம் மிடாலம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் கீழமுந்தல் மீனவ கிராமங்களில் தலா 10 கோடி ரூபாய் செலவில் மீன் இறங்கு தளம் அமைக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர், மீன்வளத்துறைக்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூரில் மீன்வளர்ப்பில் மறுசுழற்சி செய்யப்படும் நீரில் காய்கறி வளர்ப்பு பூங்கா அமைக்கப்படும் என்றார்.
மேலும், ராமநாதபுரத்தில் கடல் அரிப்பினால் சேதம் அடைந்த மீன் இறங்கு தளங்கள் 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என கூறினார்.
Comments