டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் CCTV கேமரா மூலம் கண்காணிக்கப்படும்
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுவதோடு, ஜாமர் கருவிகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுதப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தை தொடர்ந்து, 11 புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்த 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளைக் கொண்ட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு ஆண்டுக்கு ஆறு நாட்கள் வழங்கப்படும், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரும் விண்ணப்பங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளையும் ஜெயக்குமார் வெளியிட்டார்.
Comments