அச்சப்படாமல் கோழி இறைச்சி - முட்டை சாப்பிடலாம் !

0 1692

கோழி இறைச்சி அல்லது முட்டை சாப்பிடுவதால் மனிதர்களுக்கு கொரோனா நோய் வராது என்று கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அவர், கோழி இறைச்சி மற்றும்  முட்டைகளை சாப்பிட, யாரும் அச்சப்படத் தேவை இல்லை என்றார். கோழிகள் மூலம் கொரோனா நோய் பரவுவதாக வதந்தியை பரப்பியதற்காக 4 நபர்கள் கைது செய்யப்பட்டு  உள்ளதாகவும் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் புதிய கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும் - சென்னை சைதாப் பேட்டையில், கால்நடைகளுக்கு உயர் தர மருத்துவ சிகிச்சை அளிக்க, உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments