தூத்துக்குடியில் 2 மாதத்தில் பெட்ரோ கெமிக்கல் ஆலை தொடங்கப்படும்
தூத்துக்குடியில் அடுத்த 2 மாதத்தில் பெட்ரோ கெமிக்கல் ஆலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய திமுக உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், தென்மாவட்டங்களில் எவ்வித தொழில் நிறுவனங்களும் துவங்கப்படவில்லை என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொழில்துறை சிறந்து விளங்கும் பகுதியாக தென்மாவட்டங்கள் மாற்றப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
49 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, தூத்துக்குடியில் பெட்ரோ கெமிக்கல் ஆலை துவங்க நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், 2 மாதத்தில் ஆலை துவங்கப்படும் என்றார். மேலும் விருதுநகர் மாவட்டத்தில் சிப்காட் மூலம் தொழில் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
Comments