நிர்பயா வழக்கு - சம்பவம் நடந்த அன்று டெல்லியிலேயே தான் இல்லை எனக் கூறிய முகேஷ் சிங்கின் மனு தள்ளுபடி

0 5237

நிர்பயா வழக்கில் குற்றம் நிகழ்ந்த அன்று டெல்லியிலேயே தான் இல்லை எனக் கூறி குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங் தாக்கல் செய்த மனுவை பாட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு வரும் 20ம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

அனைவரது கருணை மனுக்களும் நிராகரிப்பட்டு விட்டதால், தூக்கு உறுதியாகிவிட்ட நிலையில் தண்டனையை மேலும் தாமதப்படுத்தும் நோக்கில் டெல்லி நீதிமன்றத்தில் குற்றவாளி முகேஷ் சிங் மனுதாக்கல் செய்தான்.

சம்பவம் நடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 அன்று தான் டெல்லியில் இல்லை எனவும், ராஜஸ்தானில் இருந்த தன்னை கைது செய்து அதற்கு மறுநாள் டிசம்பர் 17ம் தேதி டெல்லி அழைத்து வந்ததாகவும் தெரிவித்திருந்தான். அதனை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments