கொரோனா விழிப்புணர்வு குறித்து தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருவதாக எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்துக்கு பின்னர் பேசிய அவர், அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை வரவேற்பதாக தெரிவித்தார். மேலும் பரிசோதனைகளை மேற்கொள்ளும் மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு அம்சங்களை வழங்கவும், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சையளிக்க தனி பிரிவு அமைக்கவும் கோரிய ஸ்டாலின், தனிமைப்படுத்தும் முகாம்களை மக்கள் நெருக்கமில்லாத பகுதிகளில் அமைக்க வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசின் நடவடிக்கையை வரவேற்றமைக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தனியார் மருத்துவமனைகள் இதில் ஈடுபட மத்திய அரசு தான் அனுமதி வழங்க வேண்டும் என்று கூறினார்.
Comments