கொரோனா அச்சுறுத்தல்- சமுதாய கண்காணிப்பில் 54,000 பேர்
கொரானா தொற்று தொடர்பாக, நாடு முழுவதும் சுமார் 54 ஆயிரம் பேர் சமுதாய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் பேசிய அவர், சுகாதாரப் பணியாளர்கள் வாயிலாக இந்த சமுதாய கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். தொற்று ஏற்பட்டவர்களிடம் இருந்து ஒரு மீட்டர் தொலைவில் இருப்பது அவசியம் என்ற நிலையில், ஆபத்து என்றும் பாராமல் கொரோனா நோயாளிகளை அர்ப்பணிப்புடன் கவனிக்கும் மருத்துவர்களையும், மருத்துவப்பணியாளர்களையும் அவர் பாராட்டினார்.
Comments