கர்நாடகாவில் மருத்துவருக்கு கொரோனா வைரஸ் உறுதி

0 9771

இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு முதன்முதலில் உயிரிழந்த கர்நாடக முதியவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் கொரோனா பரவியிருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியா சென்று வந்த கர்நாடக மாநிலம் கலபுர்கியை சேர்ந்த 76 வயது முதியவர், ஹைதராபாத்தில் கடந்த 12ம் தேதி உயிரிழந்தார். கலபுர்கியில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கும் கொரோனா பரவியிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரும், குடும்ப உறுப்பினர்களும் வீட்டிலேயே மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். விரைவில் மருத்துவமனையில் தனிவார்டில் அவர் அனுமதிக்கப்பட  உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments