கொரோனா பீதி.. யார் யாரெல்லாம் மாஸ்க் அணியலாம்.!

0 5181

கொரோனா அச்சத்தால் எல்லோரும் முகமூடி அணிய தேவையில்லை என்றும், குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால் மட்டுமே முகமூடி அணிய வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்போ, அறிகுறியோ இல்லாமலேயே அதன் மீதான அச்சத்தால் மக்கள் முகமூடி அணிந்து கொண்டு செல்வதை பரவலாக காண முடிகிறது. இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட விளக்கப்படத்தில், எல்லோரும் முகமூடி அணிய தேவையில்லை எனவும், இருமல், காய்ச்சல் அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மட்டுமே முகமூடி அணிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா நோயாளிகளை கவனிப்போரும், சுவாச பிரச்சினைகள் கொண்ட நோயாளிகளை கவனிக்கும் சுகாதார ஊழியர்களும்  முகமூடி அணிய வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments