கொரோனா தாக்கத்தால் வட்டியில்லா கார் கடன் வழங்க முடிவு
கொரோனா தொற்றால் கார் விற்பனை மந்தமானதை அடுத்து, ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு, ஃபியட் ஆகிய கார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர புதிய முயற்சிகளில் இறங்கி உள்ளன.
அதன் படி கார்களுக்கு வட்டியில்லா கடன்களை வழங்க முடிவு செய்துள்ள ஜெனரல் மோட்டார்ஸ், முதல் தவணையை செலுத்துவதற்கு 4 மாத கால அவகாசமும் அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதே பாணியில் முதல் தவணையை செலுத்த 3 மாத கால அவகாசம் அளிக்கப்படும் என போர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பொருளாதார மந்த நிலையால் கார் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், புதிய சோதனையாக கொரோனா வந்துள்ளது. இதை சமாளிக்கும் நடவடிக்கைகளில் ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு, பியட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Comments