செல்போன் நிறுவனங்களின் நிலுவைத் தொகைக்கு உச்சநீதிமன்றத்தை நாடிய மத்திய அரசு
செல்போன் நிறுவனங்கள் தங்கள் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்குவதற்கு வழிவகை ஏற்படுத்தித்தரும் வகையில், மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், செல்போன் சேவை நிறுவனங்கள், தவணை முறையில் நிலுவைத் தொகையை செலுத்தும் வகையிலான கால அட்டவணையை தயாரிக்க அனுமதிக்குமாறு, கோரப்பட்டுள்ளது.
அண்மையில், செல்போன் நிறுவனங்களின் கூட்டமைப்பு, நிலுவைத் தொகையை செலுத்த கூடுதல் அவகாசம் கோரியிருந்த நிலையில், அதனை ஏற்று, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.
மேலும், செல்போன் நிறுவனங்கள் மீதான கெடுபிடியான நடவடிக்கைகளால், அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் மத்தியில் அதிருப்தி உருவாகிவிடக் கூடாது என்ற வகையிலும், மத்திய அரசு செயல்படுவதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.
Comments