கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க 18 பேர் குழு அமைப்பு
அரசு எடுத்துவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி கண்காணிக்க தலைமைச் செயலாளர் தலைமையில் 18 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை தொடர்ந்து, தலைமை செயலாளர் சண்முகம் தலைமையிலான இக்குழுவில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர், வருவாய் துறை முதன்மைச் செயலாளர், ரயில்வே மேலாளர், விமான நிலைய இயக்குனர் உள்ளிட்ட 18 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவானது, அரசின் உத்தரவுகளை செயல்படுத்தி கண்காணிப்பதுடன், கூட்டங்களை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments