கொரோனாவை சீன வைரஸ் என அழைத்த டிரம்ப்
கொரோனா வைரஸை சீன வைரஸ் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
கொரோனாவின் ஊற்றுக்கண் சீனாவின் ஊகான் நகர் என உலகமே கூறி வரும் வேளையில், அது அமெரிக்காவில் தோன்றியது என்றும் அமெரிக்க ராணுவம் அதை ஊகானுக்கு பரவச் செய்த து என்றும் சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சுவோ லிஜியான் (Zhao Lijian,) கடந்த வாரம் டுவிட்டரில் பதிவு செய்தார்.
இதை அடுத்து வாஷிங்டனில் உள்ள சீன தூதரை அழைத்தும் அமெரிக்கா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனாவை சீன வைரஸ் என்று முதன் முதலாக டுவிட்டரில் அழைத்து அதிபர் டிரம்ப் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நியூயார்க் மேயர் பில் டி பிளாசியோ (Bill de Blasio) இது அமெரிக்கர்களுக்கும் அங்குள்ள ஆசியர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சி என கூறியுள்ளார்.
Comments