கொரோனா தாக்கத்தால் 1 லட்சம் பேரை வேலைக்கு எடுக்கும் அமேசான்

0 6681

அமெரிக்காவில் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் டோர் டெலிவரி பணிகளுக்காக, சுமார் 1 லட்சம் பேரை வேலைக்கு எடுக்க உள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலையில், ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்வது பெருமளவு அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் அமேசான் மட்டுமின்றி, Albertsons, Kroger,  Raley's போன்ற சூப்பர் மார்கெட் நிறுவனங்களுக்கு ஆன்லைன் ஆர்டர்கள் அதிகரிப்பதால், கூடுதலாக வேலைக்கு ஆட்களை எடுக்க உள்ளனர்.

அதேசமயம், கொரோனா காரணமாக மூடப்பட்ட உணவகங்கள், பயண ஏற்பாட்டு நிறுவனங்களில் திடீரென வேலை இழந்தவர்களை பயன்படுத்திக் கொள்ள உள்ளதாக அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments