விசாரணைக்காக கமல் நாளை சம்பவ இடத்தில் ஆஜராக அவசியமில்லை
இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசன், நாளை சம்பவ இடத்தில் விசாரணைக்கு ஆஜராக தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் மத்திய குற்றப்பிரிவு போலீசார், நடிகர் கமல் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் விபத்து குறித்து நடித்து காட்டுமாறு போலீசார் வற்புறுத்துவதாகக் கூறி நடிகர் கமல் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது துன்புறுத்தும் நோக்கில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், இது விபத்து வழக்கே தவிர கொலை வழக்கு அல்ல என்றும், கமல் தரப்பில் வாதிடப்பட்டது. விபத்தை நேரில் பார்த்த சாட்சி என்ற அடிப்படையில் கமலுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதி கமல் நாளை நேரில் ஆஜராக தேவையில்லை என உத்தரவிட்டதோடு, தேவைப்பட்டால் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக அறிவுறுத்தினார்.
Comments