கொரோனா விடுமுறையில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பணிகள் மேற்கொள்ள உத்தரவு

0 2693

கொரோனா காரணமாக விடப்பட்டுள்ள விடுமுறையில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளும்படி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், 31ம் தேதி வரை எல்கேஜி (LKG) முதல் 9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை விடப்பட்டுள்ளது என்றும், ஆசிரியர்கள், பணியாளர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பணிக்கு வரும் ஆசிரியர்களும், அலுவலக பணியாளர்களும் வருடாந்திர திட்டத்தை தயாரித்தல், கால அட்டவணை தயாரித்தல், தீக்ஷா செயலியில் இருந்து க்யூ.ஆர். கோட் (QR Code) மூலம் பாடங்களை பதிவிறக்கம் செய்தல், ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புக்குரிய மாதிரிகளை உருவாக்குதல் பணிகளை  மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments