காவல்துறை பணிக்கான உடற்தகுதி தேர்வில் முறைகேடு
உதவி ஆய்வாளர் பணிக்கு உடற்தகுதி தேர்வுக்காக அடுத்தடுத்த தேர்வு எண்கள் கொண்ட 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அத்தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கடந்த ஜனவரி மாதம் தேர்வு நடைபெற்ற போதே பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் உடற்தகுதி தேர்வுக்காக 5 ஆயிரத்து 275 பேருக்கு தற்போது அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இதில் சர்ச்சைக்குரிய வேலூர் தேர்வு மையத்தை சேர்ந்த 100 பேரின் எண்கள் அடுத்தடுத்து இருப்பதை சுட்டிக்காட்டி, தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவிவருகிறது.
இதை மறுத்துள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய உயரதிகாரிகள், வேலூர் மாவட்டத்தில் 6015 பேர் தேர்வு எழுதியதாகவும், அதில் 236 பேர் மட்டுமே அழைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
Comments