ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா பரவ வாய்ப்பு?
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டுகளுக்கு அருகே குவிக்கப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது
இந்த மருத்துவமனையின் 2வது கட்டிடத்தில் கொரோனா சிறப்பு வார்டு செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்த கட்டிடத்தின் பின்புறம் ஏராளமான மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதாரமற்ற முறையில் காணப்படுகிறது.
இதே போல் அந்த மருத்துவ கழிவுகளை சுகாதாரப்பணியாளர் ஒருவர் எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இன்றி அகற்றி வருகிறார். நோய் பரவ வாய்ப்புள்ளதால் கொரோனா சிறப்பு வார்டு செயல்படும் கட்டிடத்தின் பின்புறம் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Comments