கொரோனா சமுதாய தொற்றாக மாறுமா?
நாட்டில் கொரோனா தொற்று சமுதாய அடிப்படையில் பரவுமா என்பது விரைவில் தெரிந்து விடும் என ICMR எனப்படும் இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பாதித்த வெளிநாடுகளுக்கு பயணம் செய்யாத நிலையிலும் சுவாச மண்டல பாதிப்புகளுடன், புளூ போன்ற அறிகுறிகள் காணப்படுபவர்களின் ரத்த மாதிரிகள் பல மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்டு தீவிரமாக சோதிக்கப்பட்டு வருகின்றன.
இதன் முதற்கட்ட முடிவுகள் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் இறுதி முடிவுகள் வெளியாகும் போது கொரோனா உள்நாட்டு சமூக தொற்றாக மாறி உள்ளதா என்பது தெரிய வரும்.
இதனிடையே சமூக தொற்றாக கொரோனா மாறத் துவங்க 30 நாட்கள் ஆகும் எனவும் அந்த 30 நாட்களையும் சமாளித்து விட்டால் சமூக தொற்றில் இருந்து நாட்டை காப்பாற்றி விடலாம் என்றும் ICMR தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
கொரானா தொற்றின் இயல்புக்கு ஏற்றவாறு அதற்கான சோதனை நடைமுறைகள் மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக 10 லட்சம் சோதனை உபகரணங்களுக்கு ICMR ஆர்டர் கொடுத்துள்ளது.
Comments