பான்-ஆதார் எண் இணைத்துவிட்டீர்களா...கெடு விதிப்பு !

0 15520

பான் எண்ணுடன் ஆதார் இணைக்க வருகிற 31-ந் தேதி கடைசி நாள் என்று வருமான வரித்துறை மீண்டும் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வருமான வரித்துறை நேற்று தனது சமூக வலைத்தள பக்கத்தில், ஒரு வீடியோவுடன் கூடிய செய்தியை வெளியிட்டது. அதில் மார்ச் 31-ந் தேதிக்குள், பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என்று கூறியுள்ளது.

பயோ மெட்ரிக் ஆதார் உறுதிப்படுத்தல் மூலமும், பான் சேவை மையங்களிலும் இப்பணியை செய்யலாம் என்றும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய பலன்களுக்கு இதை இணைப்பது அவசியம் என்றும் எனவே, இந்த இறுதி வாய்ப்பை தவற விடாதீர்கள் என்றும் வருமானவரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments