கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை தன்னிடம் மன்னிப்பு கோரியதாக ட்ரம்ப் தகவல்
கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, தன்னிடம் மன்னிப்பு கோரியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரிசோதனை இணையதளத்தை கூகுள் நிறுவனம் உருவாக்கி வருவதாக கடந்த வெள்ளிக்கிழமை ட்ரம்ப் அறிவித்திருந்தார். ஆனால், கூகுளின் துணை நிறுவனமான வெரிலி, கொரோனாவுக்கான பிரத்யோக இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த வெள்ளிக்கிழமை தான் அறிவித்ததை கூகுள் நிறுவனம் உறுதிபடுத்தியதற்கு நன்றி என்று குறிப்பிட்டார். அதே சமயம் கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக கூறி கூறிய ட்ரம்ப், எதற்காக மன்னிப்பு கேட்டார் என்பதை விளக்கவில்லை.
Comments