வெப்பத்தில் கொரோனா பரவாது என்பது நம்பிக்கையே, உண்மையல்ல - ஆய்வாளர்கள்
உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் கோடை காலத்திலும் பரவும் என்றும், குளிர்காலத்தில் மீண்டும் தோன்ற வாய்ப்பிருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இருமல், தும்மலில் போது வெளிப்படும் நீர்த்துளிகள் மூலம் வெளியேறி காற்றில் இருக்கும் கொரோனா வைரஸ், ஏப்ரல், மே மாத வெப்பத்திலும் கூட செயலிழக்காமல் இருக்கக் கூடும் என்றும், அதனால் சாதகமான பருவநிலையை எதிர்பார்த்திருப்பதை விடுத்து பொதுவெளிகளில் அதிகளவில் கூடுதல் போன்றவற்றை தவிர்த்து, உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அப்படியே கோடையில் கொரோனா வைரஸ் செயலிழந்தாலும் கூட, மீண்டும் குளிர்காலத்தில் தோன்றக் கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 2009ம் ஆண்டு தாக்கத்தை ஏற்படுத்திய H1N1 இன்புளுயன்சா வைரஸ், சமீப காலங்களில் கூட சுழற்சியில் இருப்பதை சுட்டிக் காட்டி இதனை தெரிவித்துள்ளனர்.
Comments