கொரோனா வைரஸ் : அவசர நிலையை பிரகடனப்படுத்தியது ஸ்பெயின் அரசு
ஸ்பெயின் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1000 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சனி மற்றும் ஞாயிறு இரு நாட்களில் மட்டும் 2000 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 100 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 9 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 297-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8744-ஆக உயர்ந்துள்ள நிலையில் அதிகபட்சமாக மாட்ரிட் நகரில் மட்டும் 4,665 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எச்சரிக்கை நிலையை அறிவித்துள்ள ஸ்பெயின் அரசு முக்கிய சேவைகள் அனைத்தையும் முடக்கியுள்ளன. உணவு, மருந்து வாங்கச் செல்வோர், வேலைக்குச் செல்வோர் தவிர மற்றவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
Comments