கொலைகார கொரானாவுக்கு இதுவரை 7,150 பேர் உயிரிழப்பு

0 2089

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகின் பல்வேறு நாடுகளில் அதிகரித்து வரும் நிலையில், இத்தாலியில் மேலும் 350 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர்.

சீனாவை மையமாகக் கொண்ட புறப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளை கதிகலங்க வைக்கிறது. இதுவரை 7 ஆயிரத்து 150 பேரைக் காவு வாங்கிய கொடிய நோயால், ஒரு லட்சத்து 82 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் பல்வேறு நாடுகளில் 625 பேர் மரணித்துள்ளனர். இவர்களில் இத்தாலியில் மட்டும் 2வது நாளாகவும் 350க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதேபோல் ஈரானில் கொரோனாவின் நச்சுப்பிடியில் சிக்கி 130 பேரும், ஸ்பெயினில் 48 பேரும், பிரான்சில் 21 பேரும், அமெரிக்காவில் 18 பேரும் பலியாகி உள்ளனர்.

கேம் ஆப் த்ரோன் தொடரில் நடித்து வரும் கிறிஸ்டோபர் ஹிவ்ஜூ என்பவருக்கும், பாஸ்ட் அன்ட் பியூரியஸ், ஜங்கிள் புக் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த நடிகர் இத்ரிஸ் எல்பாவுக்கும் கொரோனா தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 100 ஆண்டுகளில் முதன் முறையாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் முதன்முறையாக மூடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 8 வாரங்களுக்கு கூட்டங்கள் நடத்துவதற்கு கூட்டங்கள் எதுவும் நடத்த வேண்டாம் எனவும், குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும் அமெரிக்க மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 15 நாட்களுக்கு மதுபானக் கூடங்கள், உணவகங்கள், நீதிமன்றங்களை மூடவும் டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பல கடுமையான வழிகாட்டுதல்களை வெள்ளை மாளிகை வரும் காலங்களில் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க சுகாதாரத்துறையின் இணையத்தை முடக்கிய ஹேக்கர்கள், கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கையை அதிகரித்து எழுதி பீதியை ஏற்படுத்தினர். பின்னர் அதனை மீட்டெடுத்த அந்நாட்டு தேசிய பாதுகாப்புக் கவுன்சில் குறிப்பிட்ட இணையத்தில் வெளியான தகவல்கள் பொய்யானது என ட்விட்டரில் தகவல் வெளியிட்டது.

கொரோனா காரணமாக இத்தாலியில் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் இல்லாததால் வெனிஸ் நகர கால்வாய்கள் மிகவும் சுத்தமாகவும், தண்ணீர் தெளிந்து காணப்படுவதாகவும் உள்ளுர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு தொடர்பாக சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் பெரியவர்களை விட குழந்தைகளுக்கு நோயின் தாக்கம் கடுமையாக இருந்ததாகவும் ஆனால் இறப்பு விகிதம் குறைவாகவும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தைகளை பத்திரமாகப் பாதுகாக்குமாறு பீடியாட்ரிக்ஸ் என்ற மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments