அலிபாபா வழங்கிய பரிசோதனைக் கருவிகள் : முதல் கொரோனா பாதிப்புகளை உறுதிப்படுத்திய ஆப்பிரிக்க நாடுகள்
அலிபாபா நிறுவன இணை நிறுவனர் ஜாக்மா ஆப்பிரிக்க நாடுகளுக்கு 11 லட்சம் கொரோனா பரிசோதனைக் கருவிகளை வழங்கியுள்ள நிலையில், பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் தங்கள் முதல் கொரோனா பாதிப்பு நோயாளியை உறுதிப்படுத்தியுள்ளன.
உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு சுமார் 7 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில் ஆப்பிரிக்க நாடுகள் இதுவரை கொரோனா பாதிப்புகளை உறுதி செய்யாமல் இருந்தன. அந்த நாடுகளின் பின்னடைந்த மருத்துவ பரிசோதனை வசதிகள் குறித்து சுகாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்து வந்த நிலையில் அந்த நாடுகளில் வினியோகிக்க 11 லட்சம் பரிசோதனைக் கருவிகள் 60 லட்சம் முக கவசங்கள் உள்ளிட்டவற்றை எத்தியோப்பியாவுக்கு அனுப்பியுள்ளதாக மா ஃபவுண்டேஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சோமாலியா, லைபீரியா, பெனின், தான்சானியா, உள்ளிட்ட நாடுகள் தங்கள் முதல் கொரோனா பாதிப்பு நோயாளிகளை உறுதிப்படுத்தியுள்ளன.
Comments